HRD Corp நிறுவனத்தில் முறைகேடு! பொது கணக்குக் குழு கண்டுபிடித்தது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்‌, ஜூலை 5: மனிதவள மேம்பாட்டுக்க்‌ கழகமான HRD Corp நிர்வாகத்தில்‌ பலவீனங்கள்‌ காணப்படுவதை பொதுக்‌ கணக்குக்குழுவான PAC கண்டுபிடித்துள்ளது. சந்தேகத்திற்குரிய சொத்துடைமை ஒப்பந்தங்கள்‌, அதிக ஆபத்து கொண்ட முதலீடுகள்‌ ஆகியவையும்‌ அந்தப்‌ பலவீனங்களில்‌ அடங்கும்‌.

சந்தேகத்திற்குரிய அந்த ஒப்பந்தங்களில்‌ கடந்த 2021ஆம்‌ ஆண்டில்‌ இருபது கோடியே இருபத்தைந்து லட்சம்‌ வெள்ளிக்கு மெனாரா இக்லாஸ்‌ எனும்‌ கட்டடத்தைக்‌ கொள்முதல்‌ செய்யும்‌ ஒப்பந்தமும்‌ அடங்கும்‌.

அக்கொள்முதல்‌ நடவடக்கையின்போது கிரிஸ்டல்‌ கிளியர்‌ டெக்னோலஜி’' எனும்‌ நிறுவனத்திற்கு பன்னிரண்டு கோடி வெள்ளி வைப்புத்‌ தொகையாக வழங்கப்பட்டுள்ளது. அக்கட்டடத்தின்‌ மொத்த விலையில்‌ அது ஐம்பது விழுக்காட்டுக்கும்‌ அதிகமாகும்‌. ஆனாலும்‌, அந்தக் கொள்முதல்‌ நடவடிக்கை பின்னர்‌ ரத்து செய்யப்பட்டது என்று பொதுக்குழு தெரிவித்தது.  அந்த ஒப்பந்தமானது விற்பனை மற்றும்‌ கொள்முதல்‌. ஒப்பந்தமாகும்‌. ஆனால்‌, அதன்‌ உள்ளடக்கங்கள்‌, வாடகை ஒப்பந்தம்‌ சம்பந்தப்பட்டதாக உள்ளது என்று அது குறிப்பிட்டது. 

'வைப்புத்தொகையான பன்னிரண்டு கோடி வெள்ளியானது முப்பத்திரண்டு லட்சம்‌ வட்டியுடன்‌ திரும்ப ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்று எச்ஆர்டி கோர்ப்‌ தலைவர்‌ டத்தோ ராஜசேகரன்‌ ராமசாமி தெரிவித்துள்ளார்‌.  எச்ஆர்டி கோர்ப்‌ வாரியத்தின்‌ ஒப்புதல்‌ பெறாமல்‌  பதினைந்து கோடியே நாற்பது லட்சம்‌ வெள்ளிக்கு பங்சார்‌ சவுத்‌ எனும்‌ கட்டடம்‌ வாங்கப்பட்டிருப்பதையும்‌ பொதுக்‌ கணக்குக்குழு கண்டுபிடுத்துள்ளது. மாறாக, எச்ஆர்டி கோர்ப்‌ நிறுவனத்தின்‌ தலைமை நிர்வாக அதிகாரியின்‌ மேற்பார்வையில்‌ அக்கட்டடம்‌ வாங்கப்பட்டுள்ளது. அக்கட்டடம்‌ வாங்கப்பட்டதற்கு போதுமான ஆதாரங்கள்‌ இல்லாத காரணத்தால்‌, அக்கொள்முதல்‌ நடவடிக்கைக்கு யார்‌ பொறுப்பாக இருந்தார்‌ என்பதை எச்ஆர்டி கோர்ப்‌ நிறுவனத்தால்‌ உறுதிப்படுத்த முடியவில்லை என்றும்‌ பொதுக்‌ கணக்குழு கூறியது.

எச்ஆர்டி கோர்ப்பின்‌. வாரியக்‌ கூட்டத்தின்‌ கவனத்திற்கு கொண்டு வரப்படாமல்‌ சபாவின்‌ கோத்தா கினாபாலுவில்‌ ஒரு கோடியே அறுபது லட்சம்‌ வெள்ளி செலவில்‌ புளோக்‌ ஏ சூத்திரா அவெனியு எனும்‌ கட்டடமும்‌ வாங்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, எச்‌ஆர்டி கோர்ப்பின்‌ முதலீட்டுக் குழுவினர்‌ அதன்‌ வாரிய  இயக்குநர்களுக்குத்‌ தெரியாமலேயே  கணிசமான பணத்தை முதலீடு செய்துள்ளனர்‌. 2001ஆம்‌ ஆண்டு மனிதவள மேம்பாட்டு நிதிச்‌ சட்டத்தின்படி, முதலீட்டுக்‌ குழுவில்‌ பேங்க்‌ நெகாராவின்‌ ஒரு பிரதிநீதி இடம்பெற்றிருக்க வேண்டும்‌. ஆனால்‌, அக்குழுவில்‌ அந்தப்‌ பிரதிநிதி இடம்பெறவில்லை. அது சட்ட விரோதமாகும்‌ என்றும்‌ பொதுக்கணக்குக்‌ குழு கூறியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *