மலேசியா – வியட்நாம் போட்டியில் கைகலப்பு! ஐவர் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 12 : புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில்  மலேசியா மற்றும் வியட்நாம்  இடையே நடைபெற்ற   2027 ஆசியக் கிண்ண  தகுதிச் சுற்று கால்பந்து போட்டிக்குப் பிறகு ஏற்பட்ட கைகலப்பில் சம்பந்தப்பட்டதாக  சந்தேகிக்கப்படும் ஐந்து ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பத்தொன்பது  முதல் 27 வயதுக்குட்பட்ட அந்த ஐவரும் இரவு 11.50 மணியளவில் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கின்  கார் நிறுத்தும் பகுதியில் கைது செய்யப்பட்டதாக செராஸ் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் சூப்ரிண்டெண்டன்  ரிட்சுவான் காலிட் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின்  147 வது பிரிவின்  கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் ஒரு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக  விசாரணை அறிக்கை அரசு துணை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்  என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னதாக, அரங்கிற்கு வெளியே நடந்ததாக நம்பப்படும் கைகலப்பை  காவல்துறை அதிகாரிகள்  தடுக்க முயற்சிப்பதை சித்தரிக்கும் ஒரு நிமிட காணொளி டிக்டாக் செயலியில் வைரலானது!

Lima lelaki berusia 15 hingga 27 tahun ditahan polis selepas disyaki terlibat dalam pergaduhan selepas perlawanan bola sepak Malaysia menentang Vietnam di Bukit Jalil. Kes disiasat di bawah Seksyen 147 Kanun Keseksaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *