ஆற்றில் மூழ்கி 13 வயது சிறுமி பலி!

- Sangeetha K Loganathan
- 04 Jun, 2025
ஜூன் 4,
சகோதரருடன் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த 13 வயது சிறுமி ஆற்று நீரில் மூழ்கினார். 3 நாள்கள் தேடுதலுக்குப் பின்னர் இன்று காலை 10.44 மணிக்கு நீரில் மூழ்கிய 13 வயது Puteri Nazatul எனும் சிறுமியைச் சடலமாக மீட்டதாகச் சரவாக் மாநில மீட்பு ஆணையம் தெரிவித்தது. கடந்த திங்கட்கிழமை 13 வயது சிறுமி அவரின் சகோதரருடன் வீட்டின் பின்னால் இருந்த Sungai Katibas ஆற்றில் வழக்கம் போல குளித்துக் கொண்டிருந்த போது மாலை 5.28 மணிக்குத் திடீரென மூழ்கியதாகவும் 5.52 மணிக்கு மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தேடுதல் பணியைத் தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 நாள்கள் தொடர் தேடுதலுக்குப் பின் அவர் மூழ்கிய பகுதியிலிருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்தில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 வயது சிறுமியின் உடலைக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் மேலதிக விசாரணையைக் காவல்துறையினர் மேற்கொள்வதாகவும் சரவாக் மாநில மீட்பு ஆணையம் தெரிவித்தது.
Seorang remaja perempuan berusia 13 tahun, Puteri Nazatul, ditemui lemas selepas tiga hari hilang ketika mandi di Sungai Katibas bersama abangnya. Mayat mangsa dijumpai sejauh 1.5 kilometer dari lokasi kejadian dan diserahkan kepada pihak polis.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *