துப்பாக்கியுடன் நகைக்கடையில் கொள்ளையிட்ட மூவர்! RM390,000 இழப்பு!

- Sangeetha K Loganathan
- 13 May, 2025
மே 13,
துப்பாக்கியுடன் 3 பேர் கொண்ட குழு வணிகத்தளத்தில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடிக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தளத்தில் பரவியது தொடர்பாகக் கொள்ளையில் ஈடுப்பட்ட மூவரையும் காவல்துறை அடையாளம் கண்டுள்ளதாக ஈப்போ மாவட்டக் காவல் துறை தலைவர் Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்தார். இக்கொள்ளை சம்பவம் ஈப்போ Menglembuவில் அமைந்துள்ள Falim வணிகத்தளத்தில் கடந்த மே 9 நண்பகல் 1.25 மணியளவில் நிகழ்ந்ததாக Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்தார்.
பாராங் கதிகளுடனும் துப்பாக்கியுடனும் 3 பேர் அடங்கிய கும்பல் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டிருப்பதாகவும் சம்மந்தப்பட்ட நகைக் கடையிலிருந்து RM390,000 மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்திருப்பதாகவும் ஈப்போ மாவட்டக் காவல் துறை தலைவர் Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்தார். கொள்ளையில் ஈடுப்பட்ட மூவரும் வெள்ளை நிற Toyota Camry வாகனத்தில் தப்பியிருக்கும் நிலையில் வாகனத்தின் அடையாள எண்ணைக் கொண்டு விசாரணையைத் தொடங்கியிருப்பதாகவும் வணிகத்தளத்தில் உள்ள CCTV காட்சிகளின் மூலமாகத் திருட்டில் ஈடுப்பட்டவர்களை அடையாளம் கண்டிருப்பதாகவும் ஈப்போ மாவட்டக் காவல் துறை தலைவர் Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்தார்.
Tiga lelaki bersenjatakan pistol dan parang merompak sebuah kedai emas di Falim, Ipoh dan melarikan barang kemas bernilai RM390,000. Polis telah mengenal pasti suspek melalui rakaman CCTV dan nombor pendaftaran kereta Toyota Camry yang digunakan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *