RM 46 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்! - பேராக் காவல்துறை அதிரடி

top-news
FREE WEBSITE AD

 ஈப்போ, ஜூன் 11: ஜூன் 6 ஆம் தேதி, கெரிக்கின் தாமான் பூலாய் சவன்னா நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் சாலையோரத்தில் கைவிடப்பட்ட ஒரு வாகனத்தில் இருந்து RM4,667,850 மதிப்புள்ள 123.2 கிலோ மெத்தம்பேட்டமைன் மற்றும் கெத்தமைன் போதைப்பொருளை போலீசார் கண்டுபிடித்தனர்.

பொதுமக்கள் கொடுத்த புகாரைத் தொடர்ந்து ஹோண்டா HRV காரில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பேராக் காவல்துறைத் தலைவர் நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

இந்தப் போதைப்பொருள் பறிமுதல் இந்த ஆண்டு பேராக் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள்களில் ஒன்றாகும் என்று அவர் இன்று மாநில காவல் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

காரின் ஓட்டுநர் அல்லது பயணியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், இயந்திர எண்ணை சரிபார்த்ததன் அடிப்படையில் வாகனம் குளோன் செய்யப்பட்ட கார் என அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்!

Polis Perak merampas dadah jenis methamphetamine dan ketamine seberat 123.2 kg bernilai RM4.67 juta dalam kereta Honda HRV yang ditinggalkan di Taman Bulai Savannah, Kerian. Kenderaan itu dikenal pasti sebagai kereta klon.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *