உள்துறை அமைச்சின் அதிகாரிகளை SPRM விசாரிப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை! – Saifuddin விளக்கம்!

top-news

மே 13,

எந்தவொரு தரப்பினரையும் எந்த நேரத்திலும் விசாரிக்கும் உரிமை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு இருப்பதாகவும் அதனால் யாருக்கு என்ன பிரச்சனை என்றும் உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail கேள்வி எழுப்பினார். குடியுரிமைக்கான விண்ணப்பதின் போது லஞ்சம் பெற்றதாக 2 உள்துறை அமைச்சின் அதிகாரிகள் உட்பட மூவரை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM விசாரிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் இதைப் பற்றி தாம் அலட்டிக் கொள்ள போவதில்லை என்றும் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.

உள்துறை அமைச்சராக இருக்கும் எனது அலுவலகத்தில் ஊழல் நிகழ்ந்திருக்கிறதா இல்லையா என்பது குறித்து விசாரணையை நடத்த லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருப்பதாகவும் இதில் நான் என்ன செய்ய முடியும் இது SPRM வேலை என்றும் நான் மட்டும் அல்ல யாருமே இதில் தலையிட அதிகாரம் இல்லை என உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.

Menteri Dalam Negeri, Datuk Seri Saifuddin Nasution menyatakan tiada masalah terhadap siasatan SPRM ke atas tiga individu termasuk dua pegawai kementeriannya berhubung dakwaan rasuah permohonan kewarganegaraan. Beliau menegaskan kuasa siasatan sepenuhnya milik SPRM.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *