ஒசாகா அனைத்துலக கண்காட்சி சுவாரஸ்யம் நிறைந்த ‘கற்றல் அனுபவம்‘- சுல்தான் வர்ணனை!

- Muthu Kumar
- 10 May, 2025
ஷா ஆலம், மே 10-
ஜப்பான் நாட்டின் கன்சாயில் நடைபெற்ற 2025 அனைத்துலக ஒசாகா கண்காட்சியில் பங்கேற்றது அனுபவம் நிறைந்த, அறிவாற்றலை வளர்க்கக்கூடிய ஒரு நிகழ்வாகும் என்று மேன்மை தாங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் வர்ணித்துள்ளார்.
இம்மாதம் 3ஆம் தேதி தொடங்கி ஐந்து நாட்களுக்கு அந்த சூரிய உதய தேசத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் சுல்தான் தனது துணைவியார் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் மற்றும் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா ஆகியோருடன் கலந்து கொண்டார்.
இந்த பயணம் புதிய தொழில்நுட்பங்களின் நிலைத்தன்மை, பருவநிலை மாற்றம் மற்றும் அதனால் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு ஆகியவற்றோடு உலகின் எதிர்கால இலக்கு, சமூக, பொருளாதார மேம்பாடுகள் குறித்த கற்றல் அனுபவங்களை தமக்கு வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
மேன்மை தாங்கிய சுல்தான் கலந்து கொள்ளும் நான்காவது அனைத்துலக கண்காட்சி இதுவாகும் என்று சிலாங்கூர் அரச அலுவலகம் தனது முகநூல் பக்கத்தில் கூறியது. கடந்த 1992ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் செவில்லா, 2010ஆம் ஆண்டு சீனாவின் ஷங்காய், 2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு சிற்றரசின் துபாய் ஆகிய இடங்களில் நடைபெற்ற அனைத்துலக கண்காட்சிகளில் அவர் பங்கேற்றார்.
கடந்த 1851ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த கண்காட்சியின் கருத்து தம்மை பெரிதும் கவர்ந்ததாக சுல்தான் குறிப்பிட்டார். உலக நாடுகள் தொழில்நுட்பம், புத்தாக்கம், கலாச்சாரம், விவசாயம், பொருளாதாரம், சமூகத் தீர்வுகள் தொடர்பில் தங்களின் கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைக்கக் கூடிய அனைத்துலக தளமாக இந்த கண்காட்சி விளங்குகிறது.'நமது வாழ்வுக்காக எதிர்கால சமூகத்தை வடிவமைத்தல்' எனும் கருப்பொருளிலான இந்த கண்காட்சியில் 158 நாடுகள் பங்கேற்றன.
Sultan Selangor menghadiri Ekspo Osaka Jepun 2025 bersama keluarga diraja. Baginda kagum dengan pameran berfokuskan inovasi, kelestarian alam sekitar, dan pembangunan sosioekonomi. Ini ekspo antarabangsa keempat disertai baginda sejak 1992. Sebanyak 158 negara terlibat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *