பாஸ் கட்சியைப் பற்றி பேச அம்னோவுக்குத் தகுதியே இல்லை!

top-news

ஜூன் 10,

பாஸ் கட்சியைப் பற்றி குறை கூற அம்னோவுக்குத் தகுதியே இல்லை என கெடா மாநில முதலமைச்சரும் பாஸ் கட்சியின் உதவித் தலைவருமான Datuk Seri Muhammad Sanusi Md Nor தெரிவித்தார். பாஸ் கட்சியை மதவாதக் கட்சி என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Datuk Dr Mohd Puad Zarkashi கருத்து தெரிவித்திருந்த நிலையில் அம்னோவுக்கும் Datuk Dr Mohd Puad Zarkashi க்கும் என்ன தகுதி இருக்கிறது பாஸ் கட்சியை விமர்சிக்க என Datuk Seri Muhammad Sanusi Md Nor கேள்வி எழுப்பினார். பாஸ் கட்சி தனித்த அடையாளத்துடன் பெரிக்காத்தான் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அம்னோ அப்படியா? அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையிலே அம்னோ தகுதி என்ன என்பது தெரிவதாக Datuk Seri Muhammad Sanusi Md Nor சாடினார்.

பாஸ் கட்சி 4 மாநிலங்களின் முதலமைச்சராக இருக்கிறது. பாஸ் கட்சியிடம் 148 சட்டமன்ற உறுப்பினர்களும் 43 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளனர். அம்னோவின் நிலை என்ன? அம்னோவிடம் என்ன இருக்கிறது? எனும் கேள்வியை Datuk Seri Muhammad Sanusi Md Nor முன்வைத்தார். அம்னோ ஒரு பழைய கொட்டகை மட்டுமே என்றும் அவர்களிடம் 26 நாடாளுமன்றங்களும் 103 சட்டமன்றங்களும் மட்டுமே உள்ளது. அதிலும் 4 மாநிலங்களில் அவர்கள் முதலமைச்சர்களாக இருந்தாலும் 2 மாநிலங்களில் பக்காத்தானுடன் கூட்டணியில் ஆட்சி அமைத்திருக்கின்றனர் என Datuk Seri Muhammad Sanusi Md Nor கடுமையாகச் சாடினார்.

Datuk Seri Muhammad Sanusi Md Nor menyelar UMNO yang didakwa tidak layak mengkritik PAS, susulan kenyataan Datuk Dr Mohd Puad Zarkashi. Beliau menegaskan kekuatan PAS dalam pilihan raya jauh lebih besar berbanding kedudukan semasa UMNO.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *