போலி முதலீட்டில் RM459,000 இழந்த முதியவர்!

- Sangeetha K Loganathan
- 12 May, 2025
மே 12,
இல்லாத நிறுவனத்தில் போலி என தெரியாமல் அதிக லாபம் பெறும் எண்ணத்தில் தனது ஓய்வு ஊதிய தொகை மொத்தத்தையும் முதலீடு செய்த 73 வயது முதியவர் தாம் ஏமாற்றப்பட்டதாக நேற்று மாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகத் தென் ஜொகூர் பாரு மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார். பாதிக்கப்பட்ட முதியவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து தற்போது ஜொகூர் பாருவில் உள்ள Taman Suria குடியிருப்புப் பகுதியி வாழ்ந்து வரும் நிலையில் WHATSAPP குழுவில் அறிமுகமான முதலீடு திட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் இணைந்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி 10 முதல் ஏப்ரல் 17 வரையில் 10 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 23 பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் RM459,000 ரிங்கிட்டை முதலீடு செய்துள்ளார். தொடக்கத்தில் மாதம் RM18,360 வருமான் வந்தும் அதனை எடுக்காமல் மீண்டும் மீண்டும் முதலீடு செய்யும்படி வலியுறுத்தப்பட்டதால் தொடர்ந்து முதலீடு செய்து வந்த நிலையில் கடந்த வாரம் வருமானம் பெற்ற பணத்தைப் பரிவர்த்தனை செய்யும் போது கூடுதல் செயல்முறை தொகையைச் செலுத்தும்படி அறிவுருத்தப்பட்டதாகவும் முடியாது என்றதும் சமந்தப்பட்ட வலைத்தளம் செயலிழந்ததாகவும் பாதிக்கப்பட்ட 73 வயது முதியவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Seorang pesara kerugian RM459,000 akibat terpedaya dengan pelaburan palsu melalui WhatsApp. Mangsa, 73, membuat 23 transaksi ke 10 akaun berbeza antara Januari hingga April sebelum menyedari ditipu apabila ‘wang proses’ tidak menghasilkan pulangan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *