போலி முதலீட்டில் RM600,000 இழந்த பெண்!

- Sangeetha K Loganathan
- 09 Jun, 2025
ஜூன் 9,
சமூகவலைத்தளத்தில் கண்ட விளம்பரத்தை நம்பி போலி முதலீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்த 57 வயது பெண் வர்த்தகர் ஒருவர் RM600,000 வரையில் இழந்துள்ளார். பாதிக்கப்பட்ட 57 வயது பெண் நேற்று ROMPIN மாவட்டக் காவல்ந நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து சம்மந்தப்பட்ட போலி நிறுவனத்திற்கு எதிராக விசாரணையை மேற்கொண்டுள்ளதாகப் பகாங் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Seri Yahaya Othma தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட முதலீட்டு நிறுவனத்தில் கடதந்த மார்ச் மாதத்தில் தொடக்கமாக RM 14,000 பணத்தை முதலீடு செய்ததும் RM1,000 லாபம் பெற்றதால் நம்பிக்கையுடன் ஏப்ரல் 23 ஆம் திகதி வரையில் 3 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 28 முறை பணப்பரிவர்த்தனைகள் மேற்கொண்டதாகவும் மொத்த முதலீடு தொகை 600,000 ரிங்கிட் என பாதிக்கப்பட்ட 57 வயது பெண் புகார் அளித்துள்ளார். கடந்த வாரத்தில் RM 50,000 பணத்தைத் திரும்பப் பெற முயற்சித்த போது RM 200,000 பணத்தைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என தெரிவித்ததும் சந்தேகமடைந்த பெண் காவல் நிலையத்தில் தாம் ஏமாற்றப்பட்டதாகப் புகார் அளித்துள்ளார்.
Seorang pegawai penyelidik wanita kerugian lebih RM600,000 akibat terpedaya dengan skim pelaburan saham tidak wujud. Mangsa menyedari ditipu selepas diminta bayar caj RM200,000 untuk mengeluarkan wang. Polis mengesahkan laporan dibuat di IPD Rompin.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *