போதைப்பொருளுடன் 9 பேர் கைது!

- Sangeetha K Loganathan
- 06 Jun, 2025
ஜூன் 6,
குவாந்தானில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த 9 பேர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 9 பேரில் 6 பேர் உள்ளூர்வாசிகள் என்றும் இருவர் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. நேற்று நண்பகல் 1 மணியளவில் குவாந்தாவில் உள்ள Taman Setali Wangsa குடியிருப்புப் பகுதியின் விளையாட்டு மைதானத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவின் PGA சிறப்புப் படை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வழக்கமான ரோந்து பணியிலிருந்த PGA அதிகாரிகள் விளையாட்டு மைதானத்திலிருந்த 9 பேரிடம் சோதனை நடத்திய போது 1000 யாபா மாத்திரைகள், 122.83 கிராம் syabu, 2.20 கிராம் Ganja பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மேலும் RM6267.00 ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மொத்த போதைப்பொருளின் மதிப்பு RM 40,838.30 என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களி மூவர் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Sembilan individu termasuk warga Myanmar dan Indonesia ditahan dalam serbuan di Kuantan kerana memiliki dadah. PGA merampas syabu, ganja, dan pil yaba bernilai RM40,838.30 serta wang tunai. Tiga daripada mereka dikenal pasti tinggal secara haram di Malaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *