படிக்க சொன்ன தாயையும் அண்ணனையும் கொலை செய்த SPM மாணவன் கைது!

- Sangeetha K Loganathan
- 13 Jun, 2025
ஜூன் 13,
SPM தேர்த்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து படிக்கும்படி கட்டாயப்படுத்திய தாயாரையும் தன் அண்ணனையும் கொடூரமாகக் கத்தியால் குத்தி கொலை செய்ததாக 17 வயது SPM மாணவன் நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டிருக்கும் 17 வயது மாணவனை விசாரணைக் காவலில் ஜூன் 19 வரையில் தடுத்து வைக்கும்படி Ayer Keroh Majistret நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அதிகாலை 5 மணியளவில் மலாக்கா Taman Rambai Mutiara குடியிருப்புப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக மலாக்கா மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Dzulkhairi Mukhtar தெரிவித்தார். ஆசிரியரும் தனது தாயாருமான 51 வயது பெண் தொடர்ந்து தனது மகனைப் படி படி என வலியுறுத்தியதால் 17 வயது இளைஞர் கோபத்தில் கத்தியால் குத்தியதாகவும் வீட்டிலிருந்த 21 வயது இளைஞரும் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் 13 வயது மற்றொரு சிறுவன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் Datuk Dzulkhairi Mukhtar தெரிவித்தார்.
Seorang pelajar SPM berusia 17 tahun ditahan selepas menikam ibu dan abangnya hingga mati di Taman Rambai Mutiara, Melaka kerana dipaksa belajar. Adik mangsa berusia 13 tahun turut cedera. Mahkamah Ayer Keroh menahan reman suspek hingga 19 Jun.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *