Azam Baki பதவி நீட்டிப்பு தேவையில்லாதது! - Nurul Izzah Anwar

top-news

மே 11,

லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தலைமை இயக்குநர் TAN SRI AZAM BAKIயின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டிருப்பது தேவையற்றது என பிரதமரின் மகளும் PKR துணைத் தலைவர் வேட்பாளருமான Nurul Izzah Anwar சாடினார். பதவி காலம் நிறைவு பெற்றும் மூன்றாவது முறையாக அவரின் பதவிக் காலம் நீட்டிப்பதற்கான எந்தவோர் அவசாயமுமில்லை என  Nurul Izzah Anwar தெரிவித்தார். 

62 வயதாகியும் அரசு அதிகாரிகள் பதவியில் நீட்டிக்கப்படுவது இளம் மற்றும் புதிய அரசு ஊழியர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக Nurul Izzah Anwar தெரிவித்தார். SPRM தலைமை இயக்குநராக TAN SRI AZAM BAKI 2023 ஆம் ஆண்டு பதவி காலம் நிறைவாகியும் ஓராண்டு பதவி நீட்டிப்பைப் பெற்றார். அதன் பின்னர் மீண்டும் 2024 ஆம் ஆண்டு மீண்டும் ஓராண்டு பதவி நீட்டிப்பைப் பெற்றார். தற்போது மீண்டும் ஓராண்டுக்கு அவரின் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Nurul Izzah Anwar mengkritik pelantikan semula Azam Baki sebagai Ketua Pesuruhjaya SPRM selama setahun lagi, menyatakan ia menyukarkan reformasi pentadbiran. Beliau menyeru keberanian politik untuk membuat pilihan baharu demi perubahan sistemik.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *