சபா ஊழல்! இருவருக்கு எதிராக SPRM விசாரணை!

top-news

ஜூன் 13,

சபா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட ஊழல் புகார்கள் தொடர்பான விசாரணையிலிருவர் மீது லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதாக SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki இன்று தெரிவித்தார். இது தொடர்பாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை மேற்கொண்டதில் ஒன்று அல்லது இருவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருப்பதாகவும் நீதிமன்ற ஆய்வுக்குப் பின்னர் அவர்களின் பெயர் வெளியிடப்படும் என்றும் SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார்.

முன்னதாகச் சபா மாநிலக் கனிமவளக் குத்தகைகள் தொடர்பாகச் சட்டமன்ற உறுப்பினர்களிடையே லஞ்சம் தொடர்பானக் கலந்துரையாடல் நிகழ்வதாக வெளிவந்த ஆடியோ பரவியது. கடந்த ஜூன் 6, இது தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் இரு தனிநபருக்கு எதிரானக் குற்றச்சாட்டுகள் குறித்த ஆவணங்கள் சேகரிக்கப்பட்டிருப்பதாகவும் சம்மந்தப்பட்ட ஆடியோவின் மீதானப் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார். தொடர்புடைய இரு தனிநபர் குறித்தான விவரங்களை விரைவில் வெளியிடுவதாகவும் SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார்.


SPRM telah mendakwa dua individu berkaitan kes rasuah melibatkan wakil rakyat Sabah berhubung konsesi mineral. Ketua Pesuruhjaya SPRM, Tan Sri Azam Baki, memaklumkan identiti mereka akan didedahkan selepas semakan mahkamah. Siasatan ke atas rakaman audio turut dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *