ராமசாமியிடம் SPRM விசாரணை! - Tan Sri Azam Baki

top-news

மே 13,

பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சரும் உரிமை கட்சியின் தலைவருமான பேராசிரியர் P Ramasamyயிடம் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தவிருப்பதாக வெளிவந்த செய்திகள் உண்மை தான் என லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki இன்று உறுதிப்படுத்தினார். பினாங்கில் தங்க தேர் வாங்கியது தொடர்பாகப் பினாங்கு இந்து அறநிலை துறையிடமிருந்து பெறப்பட்ட RM300,000 ரிங்கிட் சம்மந்தப்பட்ட விசாரணை இது என உரிமை கட்சியின் தலைவர் P Ramasamy இன்று உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பாகப் பினாங்கு இந்து அறநிலை துறையினர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேராசிரியர் ராமசாமி துணை முதலமைச்சராகவும் பினாங்கு இந்து அறநிலை துறையின் தலைவராகவும் இருந்த போது சுமார் RM50,000 க்கும் மேற்பட்ட நிதி முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகக் குற்றம் சாட்டிய நிலையில் அது குறித்தான விசாரணைக்காகப் பேராசிரியர் ராமசாமி Butterworth Sesyen நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் ராமசாமி மீதானக் குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலானச் சிறையும் கையாடல் செய்யப்பட்ட தொகையில் 5 மடங்கு அல்லது RM10,000 வரையில் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது.

Tan Sri Azam Baki mengesahkan SPRM sedang menyiasat Prof. P. Ramasamy berhubung dakwaan penyelewengan dana RM300,000 oleh Hindu Endowments Board Pulau Pinang semasa beliau memegang jawatan Timbalan Ketua Menteri. Ramasamy dijangka dipanggil ke mahkamah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *