NGO போர்வையில் நிதிமோசடி! RM 5 மில்லியனுடன் நால்வர் கைது! – SPRM

- Sangeetha K Loganathan
- 12 Jun, 2025
ஜூன் 12,
பொது இயக்கங்கள் மூலமாக அரசு நிதியை மோசடி செய்ததாக 4 உள்ளூர் நபர்களை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.. சம்மந்தப்பட்ட இரு பெண்களும் 2 ஆண்களும் NGO மூலமாக அரசு நிதியைப் பெற்று மோசடி செய்ததாகவும் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் நேற்று மாலை 4 மணி முதல் 7 மணிவரையில் மலாக்கா லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் 7 நாள்கள் விசாரணைக் காவலில் தடுத்து வைக்கும்படி மலாக்கா Majistret நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
2015 முதல் 2025 வரையில் அவர்கள் இந்த மோசடியை நிகழ்த்தியிருப்பதாகவும் சோதனையில் RM900,000 ரொக்கத்தைக் கைப்பற்றியதாகவும் 14 வங்கிக் கணக்குகளை முடக்கியிருப்பதாகவும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தெரிவித்துள்ளது. முடக்கப்பட்ட 14 வங்கிக் கணக்குகளின் மொத்த மதிப்பு சுமார் RM5 மில்லியன் என்றும் சம்மந்தப்பட்ட NGOவுக்கு மலாக்கா, பினாங்கு, சிலாங்கூர் மாநிலங்களில் 9 சொத்துகளும் 4 வீடுகளும் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட NGOவுக்குச் சொந்தமான அனைத்து சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக சிலாங்கூர் மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் Tuan Hairuzam Mohmad Amin@Hamim தெரிவித்தார்.
SPRM menahan empat individu, termasuk dua wanita, kerana menyeleweng dana kerajaan melalui NGO sejak 2015. Sebanyak RM900,000 wang tunai, 14 akaun bank bernilai RM5 juta serta sembilan hartanah di Melaka, Pulau Pinang dan Selangor telah disita untuk siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *