FELDA நிலத்த விற்க முயன்ற 8 பேர் கைது! 400 மில்லியன் மோசடி! - SPRM அதிரடி!

top-news
FREE WEBSITE AD

அரசுக்குச் சொந்தமான FELDA நிலத்தைத் தனியார் நிறுவனத்திற்கு விற்க முயன்ற 8 உள்ளூர் ஆடவர்களை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது. மலாக்கா FELDA நிலமானச் சுமார் 400 மில்லியன் மதிப்பிலான 260 hektar FELDA நிலத்தைத் தனியார் நிறுவனத்திடம் விற்க சபாவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தனியார் நிறுவனத்தின் இயக்குநர், வங்கி மேலாளர், நில இடைத்தரகர்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக MACC தெரிவித்தது.

260 hektar FELDA நிலத்தை விற்க 2 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற முற்பட்டதாகவும் போலி ஆவணங்கள் தயாரித்து அரசாங்கத்தை ஏமற்றியக் குற்றத்திற்காகவும் சுமார் 200 வங்கிக் கணக்குகள் வாயிலாக இம்மோசடி நடத்தப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் பண மோசடி தடுப்புப் பிரிவு இயக்குநர் Mohamad Zamri Zainul Abidin தெரிவித்தார்.

இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட எண்மருக்குப் பின்னனியில் அரசு ஊழியர்களும் சம்மந்தப்பட்டிருப்பதால் கைது செய்யப்பட்டவர்களைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதாகவும் வரும் திங்கள் கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிருப்பதாகவும் Mohamad Zamri Zainul Abidin தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *