தங்கும் விடுதியில் லஞ்சம் பெற்ற அரசு ஊழியர் கைது! - SPRM அதிரடி!

top-news
FREE WEBSITE AD

RM 65,000 ரிங்கிட் லஞ்சம் பெற்று அரசு குத்தகையைத் தனியார் நிறுவத்திற்கு வழங்கியதாக நம்பப்படும் மூத்த அரசு ஊழியரை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளதாக அதன் தலைமை ஆணையர் Tan Sri Azam Baki உறுதிப்படுத்தினார். நேற்று மாலை SARAWAK MIRIயில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் 39 வயதான அந்த அரசு ஊழியர் தனியார் நிறுவனத்துடனானச் சந்திப்பின் போது, கைது செய்ததாக Tan Sri Azam Baki தெரிவித்தார்.

சுமார் 2மில்லியன் மதிப்பிலான மாநில உள்கட்டமைப்பு மேம்பாட்டு குத்தகையை ஒரே தனியார் நிறுவனத்திற்குத் தொடர்ந்து 3 ஆண்டுகளாக வழங்கிய ஆதாரத்தின் அடிப்படையில் அந்த அரசு ஊழியரை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்து கண்காணித்ததில், நேற்று மாலை சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்துடன் தங்கும் விடுதியில் அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பை நடத்தவிருப்பதாகத் தகவல் கிடைக்க பெற்றதாகவும், சம்மந்தப்பட்ட அரசு ஊழியர் லஞ்சம் பெறுவதை உறுதி செய்ததும் கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM  தலைமை ஆணையர் Tan Sri Azam Baki  விளக்கமளித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *