RTM, MINNAL FM. VASANTHAM நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளிக்கவும்! – TEO NIE CHING

- Sangeetha K Loganathan
- 11 Jun, 2025
ஜூன் 11,
புத்ராஜெயா இந்திய அரசு ஊழியர்கள் சங்கமான ‘இமயம்’ பிரதிநிதிகள், அதன் தலைவர் மருத்துவர் சதீஸ்குமார் கே. முத்துசாமி தலைமையில், தொடர்பு துணையமைச்சர் தியோ நி சிங் அவர்களை மரியாதை நிமித்தமாக அலுவலகத்தில் சந்தித்தனர்.
புத்ராஜெயா மற்றும் சைபர்ஜெயாவில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட இந்திய அரசு ஊழியர்கள் இமயம் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு ஒற்றுமை, சிறந்த தொழில்முறை ஆக்கப்பூர்வம் மற்றும் அரசு ஊழியர்களின் நலனை வலுப்படுத்தும் நோக்கில் பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சந்திப்பின் போது, தங்கள் உறுப்பினர்களை நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தும் திட்டத்தையும், சமூக மாற்றத்திற்கான பல முயற்சிகளை செயல்படுத்தும் திட்டங்களையும் இமயம் குழு வெளிப்படுத்தியது. மேலும், அரசு நிறுவனங்களுடனான ஒத்துழைப்புகளையும் வலுப்படுத்த இவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
“இது போன்ற சிறந்த முயற்சிகளை எப்போதும் நான் வரவேற்கிறேன். எனது நாடாளுமன்றத் தொகுதியான கூலாயில் அரசாங்க வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், ஆர்.டி.எம்-இன் மின்னல் எஃப்.எம் மற்றும் வசந்தம் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் தகவல்களை மக்களுக்கு விரிவாக கொண்டு சேர்க்க வேண்டும்” என துணையமைச்சர் வலியுறுத்தினார்.
இமயம் குழுவின் சமூக முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பையும், முயற்சியையும் பாராட்டிய தியோ நி சிங், “இந்த முயற்சிகள் பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் பொது சேவைத் துறையில் சேர ஊக்குவிக்கும் மற்றும் நாட்டிற்கு பங்களிக்க வழிகாட்டும் உதவும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
Kumpulan Imayam, mewakili 300 kakitangan kerajaan India di Putrajaya bertemu Timbalan Menteri Komunikasi, Teo Nie Ching bagi membincangkan peluasan keahlian dan kerjasama. Teo menyokong usaha mereka dan mencadangkan RTM, Minnal FM serta Vasantham TV membantu hebahkan peluang perkhidmatan awam.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *