SPRM விசாரணை உயிரிழந்த டி.ஏ.பி அரசியல் செயலாளருக்கு நீதி வேண்டும்!

- Sangeetha K Loganathan
- 08 Jun, 2025
ஜூன் 8,
D.A.P கட்சியின் Teoh Beng Hock லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையின் போது உயிரிழந்தது தொடர்பான வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் Teoh Beng Hock வழக்கை உயர்நீதிமன்றத்தின் சிவில் பிரிவின் கீழ் விசாரிக்க வேண்டும் என டி.ஏ.பி கட்சி வலியுறுத்தியது. இந்த வழக்கைச் சிறப்பு வழக்காகக் கருத முடியாது என்றும், இதன் விசாரணையில் எந்தவொரு தரப்பினரையும் தடுப்புக் காவலில் வைக்க முடியாது என்றும் கைது நடவடிக்கையை மேற்கொள்வதற்கான தகுந்த ஆதாரங்கள் ஏதுமில்லை என்றும் வழக்கறிஞர் மன்றத்தின் இயக்குநர் Datuk Mohd Dusuki Mokhtar கடந்த மே 30 ஒர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
ஆனால், மேல்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து உயர்நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்ற வழக்கறிஞர் மன்றத்தின் இயக்குநர் Datuk Mohd Dusuki Mokhtar க்கு மட்டுமே அதிகாரம் இருப்பதால் மேலதிக விசாரணைக்கும் சிறப்பு நடவடிக்கை குழுவையும் அமைக்க வழக்கறிஞர் மன்றத்திற்கு டி.ஏ.பி கட்சி வலியுறுத்தியதாக DAP கட்சியின் தலைவர் Gobind Singh Deo பொதுச் செயலாளர் Anthony Loke ஆகிய இருவரும் இன்று வலியுறுத்தினர். கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 16 சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரான Ean Yong Hian Wan இன் உதவியாளாரான Teoh Beng Hock பணமோசடி வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பதாக ஷா அலாம் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்தில் விசாரணையின் போது அதன் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
DAP menuntut keadilan untuk Teoh Beng Hock yang meninggal dunia semasa siasatan SPRM pada 2009. Parti itu mahu kes disiasat di Mahkamah Tinggi Sivil dan menubuhkan pasukan khas bagi menyiasat semula punca kematian tragis tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *