குடிமக்கள் அல்லாதோரை போராட்டத்தில் ஈடுபடுத்தியது தவறு! பகுத்தறிவோடு செயல்பட்டிருக்கலாம்!
- Shan Siva
- 16 Jun, 2024
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 16: யுனிவர்சிட்டி மலேசியா சபாவின் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில், மலேசியர்கள் அல்லாதவர்கள் ஈடுபட்டது குறித்து உயர்கல்வி அமைச்சகம் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஏற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள் பற்றி அறிந்து ஆச்சரியமடைந்ததாக, உயர்கல்வித்துறை துணையமைச்சர் முஸ்தபா சக்முட் தெரிவித்தார்.
குடிமக்கள் அல்லாதவர்கள் சபா மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் ஈடுபட்டிருக்கக் கூடாது. இது நடக்கும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை, குறிப்பாக இது நமது மாணவர்களை உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.
மாணவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க உரிமை உள்ளது. அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தேவையான அனுமதிகளைப் பெற வேண்டும்.
பொதுப் போராட்டத்தின் பிரச்சினைகளில் ஒருவர் பகுத்தறிவுடன் இருக்க வேண்டும். அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதைத் தடுக்கவில்லை.
ஆரம்பத்தில் இருந்தே, முறையான அனுமதி பெற்று அமைதியான மற்றும் பகுத்தறிவு ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு தாம் அவர்களுக்கு அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.
ஆனால் அவர்கள் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க குடிமக்கள் அல்லாதவர்களைக் கொண்டு வந்தது நடந்திருக்கக்கூடாது என்று தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை, போராட்டத்தில் கலந்து கொண்ட ஆவணமற்ற ஒன்பது நபர்களை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *