களவாடப்பட்ட தொகுதிகளை அம்னோவிடம் ஒப்படைக்க வேண்டும்-அமாட் ஸாஹிட்!

top-news
FREE WEBSITE AD

கப்பளா பத்தாஸ், மே 13-

வரும் சபா சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் கூட்டணியொன்றை அமைக்க தேசிய முன்னணி தயாராக உள்ளது என்று அக்கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடி நேற்று தெரிவித்தார். ஆயினும், கட்சி தாவல் காரணமாக அம்னோ இழந்துள்ள சட்டமன்றத் தொகுதிகளை அக்கட்சியிடமே திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இன்னொரு கட்சிக்குத் தாவிய பிறகு போட்டியிட்டு வெற்றி பெற்ற நபர்களிடமிருந்து
அத்தொகுதிகளை மீட்டெடுப்பதுதான் எங்களின் நோக்கமாகும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அம்னோவுக்கு பல தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், கடைசி நேர மாற்றத்தினால் அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் அதில் போட்டியிட்டனர். இறுதி நேரத்தில் நடைபெற்ற தில்லுமுல்லு வேலைகளினால் நான்கு தொகுதிகளில் அம்னோ போட்டியிட முடியாமல் போனது என்று ஸாஹிட் சொன்னார்.

வரும் பதினேழாவது சபா சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான், தேசிய முன்னணி, காபோங்கான் ரக்யாட் சபா (ஜிஆர்எஸ்) ஆகியவை ஒரே அணியாகப் போட்டியிட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிந்துரைத்துள்ளார். தேசிய நிலைத்தன்மையை நிலை நிறுத்துவதற்கும் சபாவின் அரசியல் சூழ்நிலையை உறுதிப்படுத்துவதற்கும் இந்த மூன்று கூட்டணிகளும் ஒரே கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டியது அவசியமாகும் என்று அன்வார் கூறியிருந்தார்.

National Front bersedia bina gabungan besar untuk pilihan raya Sabah. Tuntut kerusi hilang UMNO dikembalikan. Tekankan kerjasama parti demi kestabilan politik dan kemenangan bersama dalam pilihan raya akan datang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *