பேராக் முழுவதும் மொத்தம் 31 உணவகங்களை உடனடியாக மூட உத்தரவு!

top-news
FREE WEBSITE AD

உணவுச் சட்டம் 1983 இன் பிரிவு 11 ஐ மீறியதற்காக பேராக் முழுவதும் மொத்தம் 31 உணவகங்களை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

உணவு சுகாதார விதிகள் 2009ன் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக உணவக உரிமையாளர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு RM244,176 மதிப்பிலான 1,330 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநில மனித வள, சுகாதார, தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் இந்திய சமூக விவகாரக் குழுத் தலைவர் ஏ.சிவநேசன் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் 5,443 உணவகங்கள்  ஆய்வு செய்யப்பட்டு, உணவக உரிமையாளர்களின் பொதுவான கடமைகளை கடைபிடிக்கத் தவறியதும், தூய்மை நிலைகள், உணவு பரிமாறுபவர்களின் சுகாதாரம் மற்றும் ஆடை விதிமுறைகளான ஏப்ரான்கள் மற்றும் தலையை மூடுதல் போன்ற விதிமுறைகளுக்கு உட்படாதது என பல்வேறு குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று நேற்றிரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஏ.சிவநேசன் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *