தண்டவாள மேம்பாலத்தை மோதிய எரிவாயு சிலிண்டர் லாரி!

top-news

மே 12,

எரிவாயு சிலிண்டர்களைக் கொண்டு சென்ற Treler லாரி மேம்பாலத்தின் உயரத்தைக் கவனிக்காமல் சென்றதால் தண்டவாள மேம்பாளத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் எரிவாயு சிலிண்டர்கள் சாலையில் சிதறியது. இது தொடர்பானக் காணொலிகள் சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து இந்த விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என KUALA KRAI மாவட்டக் காவல் ஆணையர் MAZLAN MAMAT இன்று உறுதிப்படுத்தினார்.

தண்டவாள மேம்பாலத்தை மோதியதால் இரயில் தண்டவாளம் சேமடைந்ததாக வெளிவந்த செய்திகளில் உண்மையில்லை என்றும் சிரம்பானிலிருந்து கோத்தா பாருவிற்குச் செல்லும் இரயில் இந்த விபத்தால் தடையில்லாமல் பயணிக்கும் என்றும் தண்டவாள மேம்பாலம் உறுதியுடன் இருப்பதையும் KUALA KRAI மாவட்டக் காவல் ஆணையர் MAZLAN MAMAT உறுதிப்படுத்தினார். இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை 3.21 மணிக்கு நிகழ்ந்தது என்றும் சம்பவம் நிகழந்தவுடன் இரயில் சேவை துறையின் மேம்பாலத்தைச் சோதனையிட்டதில் இரயில் பயணிக்க எந்தவொரு தடையும் இல்லை என விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sebuah treler membawa silinder gas cecair tersangkut pada jejambat landasan kereta api di Kuala Krai selepas pemandunya gagal menganggarkan ketinggian struktur. Silinder gas bertaburan di jalan namun tiada kecederaan atau kerosakan pada landasan dilaporkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *