வெள்ளப் பகுதிக்குச் சென்று LIVE காட்டினால் கடும் நடவடிக்கை! - காவல்துறை எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

அலோர் ஸ்டார், செப் 21: வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் சென்று சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது கெடா காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று மாநில காவல்துறைத் தலைவர் Fisol Salleh எச்சரித்துள்ளார்.

தங்களின் பதிவுகள் பார்வைகள் மற்றும் மதிப்பீடுகளைப் பெறுவதற்குப் பொதுமக்களி  துயரத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம் என்று அவர் கூறினார்.

ஆபத்தான பகுதியில் இருந்து யாரேனும் நேரடி ஒளிபரப்பு செய்வது கண்டறியப்பட்டால், அதை நிறுத்தி தேவையான நடவடிக்கை எடுப்போம் என்று பொகோக் சேனாவில் உள்ள நிவாரண மையத்தை  பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

வெள்ளம் பாதித்த அனைத்து மாவட்டங்களிலும் வழக்கமான ரோந்து பணியை மேற்கொள்ளவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கவும் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிசோல் கூறினார்.

லோரோங் செரியில் நேற்று மழைக்கால வடிகாலில் மூழ்கிய இரண்டு வயது சிறுமியின் வழக்கில் அலட்சியமாக இருந்ததற்கான சாத்தியக்கூறுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.  மேலும் விசாரணைக்காக குழந்தையின் குடும்பத்தினரை வரவழைப்போம், என்றார்.

கிராம மக்கள் நூர் ஆயிஷா மிஸ்யா அஃபிஃபா அப்துல் ஃபத்தாஹ்வின் உடலை இரவு 8 மணியளவில் வாய்க்காலில் கண்டெடுத்தனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *