அது “மடானி சிட்டி”, “அன்வார் சிட்டி” அல்ல!

- Muthu Kumar
- 06 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 6-
புத்ராஜெயாவில் "மடானி சிட்டி" எனும் மாநகரத் திட்டம் நிர்மாணிக்கப்படவிருப்பதை பிகேஆர் தலைவர் ஒருவர் தற்காத்துப் பேசியிருக்கிறார். அத்திட்டத்திற்கு அரசாங்கக் கொள்கைப் பெயர் சூட்டப்பெற்றிருப்பது பற்றி பெர்சத்து கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பி இருப்பதைத் தொடர்ந்து பிகேஆர் கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றத்தின் உறுப்பினர் ஜி.சிவமலர் அத்திட்டத்தைத் தற்காத்துள்ளார்.
மடானி எனும் வார்த்தை அரசாங்கத்தின் அதிமுக்கிய விழுமியங்களான நீடித்த பாதுகாப்பு, புத்தாக்கம், கருணை போன்றவற்றைக் குறிக்கும் ஒற்றைச் சொல்லாகும். அது எந்தவொரு தனிநபரையும் விளம்பரப்படுத்தப்படும் ஒரு சொல் அல்ல என்று அவர் விளக்கினார்.அது மடானி சிட்டி (மடானி மாநகர்) என்றுதான் அறியப்பட வேண்டும்.
மாறாக, பெர்சத்து கட்சியின் தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைஃபுல் வான் ஜான் விஷமத்தனமாக கூறியிருப்பதுபோல் அது “அன்வார் சிட்டி” அல்ல என்று சிவமலர் கூறினார்.நல்ல கோட்பாடுகளை முன்வைத்து நிர்மாணிக்கப்படவிருக்கும் அத்திட்டத்தை அரசியல் ஆதாயத்திற்காக எள்ளி நகையாடுவது வெட்கக்கேடாகும் என்று அறிக்கையொன்றின்வழி அவர் குறிப்பிட்டார்.
புத்ராஜெயாவின் மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர் அரசு ஊழியர்களாக இருப்பதால், அவர்களின் குடியிருப்புத் தேவைக்காக அத்திட்டம் நிர்மாணிக்கப்படவுள்ளது.நாற்பத்தோரு ஹெக்டர் நிலப்பரப்பில் மடானி சிட்டி மேற்கொள்ளப்படுகிறது. அதில் முப்பதாயிரம் பேர் வசிக்கக்கூடிய பத்தாயிரம் வீடுகள் கட்டப்படும்.இத்திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா ஜூன் 26ஆம் தேதியன்று நடைபெறும்.
PKR pemimpin S. Sivamalar mempertahankan projek "Madani City" di Putrajaya selepas dikritik oleh Ahli Parlimen Bersatu. Beliau menegaskan istilah "Madani" merujuk kepada nilai kerajaan, bukan individu. Projek itu bakal menyediakan 10,000 rumah untuk penjawat awam.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *