மழலையர் பள்ளி உட்பட 7 வளாகங்களை மூடிய பினாங்கு சுகாதாரத் துறை!

- Sangeetha K Loganathan
- 14 Jun, 2025
ஜூன் 14,
பினாங்கு மாநிலச் சுகாதாரத் துறை மேற்கொண்ட சோதனையில் இரு மழலையர் பள்ளி உட்பட 7 வளாகங்கள் மூடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பினாங்கு மாநிலச் சுகாதாரத் துறை, பினாங்கு மாநிலச் சுங்கத்துறை, பினாங்கு மாநில வாழ்க்கை செலவீனத் துறை, Seberang Perai நகராண்மைக் கழகம் ஆகியவைச் சுமார் 175 வளாகங்களில் சோதனையை மேற்கொண்டதாகவும் 167 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. RM 60,000 மேலான மதிப்புடைய பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதிற்குக் குறைவானவர்களுக்குச் சிகரெட்டுகள் விற்பனை செய்த குற்றத்திற்காக 84 வணிகக் கடைகளுக்குச் சம்மன் வழங்கியிருப்பதாகவும் சுமார் 50க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத சிகரெட் பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்திருப்பதாகவும், சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்ட மழலையர் பள்ளியை உடனடியாக மூடியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட மழலையர் பள்ளியில் இருந்த குழந்தைகளுக்குச் சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர்களில் சில குழந்தைகளுக்குத் தொற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்தததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jabatan Kesihatan Pulau Pinang menutup tujuh premis termasuk dua tadika selepas pemeriksaan ke atas 175 premis. 167 saman dikeluarkan, barangan bernilai RM60,000 dirampas. Beberapa kanak-kanak tadika dikesan menghidap penyakit berjangkit selepas ujian kesihatan dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *