சட்ட சீர்திருத்தம் தொடர்புடைய ஆவணங்கள் மாமன்னரிடம் சமர்ப்பிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 4-

இஸ்தானா நெகாராவில் நேற்று சட்ட சீர்திருத்தத்தின் அடைவுநிலை, அதன் திட்ட விளக்கம் மற்றும் தேசிய தலைமை கணக்காய்வாளர் அறிக்கை ஆகியவை மாட்சிமை தங்கிய மாமன்னர், சுல்தான் இப்ராஹிமிடம் வழங்கப்பட்டது.

சட்ட சீர்திருத்தத்தின் அடைவுநிலை மற்றும் அதன் திட்ட விளக்கத்தை, சட்டம் மற்றும் கழக சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஒத்மான் சைட், மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் வழங்கியதாக தமது முகநூல் பக்கத்தில் மாமன்னர் பதிவிட்டிருந்தார்.

2025ஆம் ஆண்டுக்கான இரண்டாவது தேசிய தலைமை கணக்காய்வாளரின் அறிக்கையை தேசிய தலைமை கணக்காய்வாளர் டத்தோஸ்ரீ வான் சிய்ராயா வான் முஹமட் ரட்சி மாமன்னரிடம் விளக்கினார்.அவ்விரு விளக்கவுரைகளும் தலா ஒரு மணி நேரம் நீடித்தன.

Yang di-Pertuan Agong Sultan Ibrahim menerima taklimat mengenai kemajuan reformasi undang-undang, pelan pelaksanaannya serta Laporan Ketua Audit Negara 2025 oleh Menteri Undang-Undang Datuk Seri Azalina Othman Said dan Ketua Audit Negara Datuk Seri Wan Suraya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *