குழந்தைகளின் எதிர்காலத்திற்கான வழிகாட்டுதல்! - ஜாஹிட் ஹமிடி
- Shan Siva
- 19 Sep, 2024
ஷா ஆலம், செப் 19: சமூக நல இல்லங்கள் தொடர்பான நலன்புரித் துறையானது
அதன் பராமரிப்பில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சியில் மிகவும் முனைப்பான பங்கெடுப்பை மேற்கொள்ள
வேண்டும் என்று துணைப் பிரதமர்
டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார். சிலாங்கூர்
மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள நலன்புரி மற்றும் தொண்டு இல்லங்களில் சமீபத்திய
ஒப்ஸ் குளோபல் நடவடிக்கையின் வழி மீட்கப்பட்ட குழந்தைகளை மேற்கோள் காட்டி, குழந்தைகளை சிறப்பாகத் தயார்படுத்துவதற்குத்
தேவையான ஆதரவைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
குழந்தைகளின் எதிர்காலம், மன நலம், உணர்ச்சி மற்றும்
தார்மீக வழிகாட்டுதலை வழங்குவது இதில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
குழந்தைகளின்
குணநலன் வளர்ச்சியை புறக்கணிக்காமல், அவர்கள் எதிர்காலத்திற்கு தயாராக இருப்பதை உறுதி செய்வதில் துறைக்கு முக்கிய பங்கு
இருக்க வேண்டும் என்று இன்று வரலாறு மற்றும் தேசிய ஒற்றுமை 2024 கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *