'சுக்குக்' நிதி மோசடி; டான்ஸ்ரீயிடம் எஸ்பிஆர்எம் வாக்குமூலம் பதிவு!

- Muthu Kumar
- 12 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 12-
கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை கட்டுமானத்திற்காக 'சுக்குக்' நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் டான்ஸ்ரீ அந்தஸ்து கொண்ட நபரிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்பிஆர்எம் இன்று வாக்குமூலத்தை பதிவு செய்தது.
கோலாலம்பூரில் உள்ள அந்நபரின் வீட்டில், எஸ்பிஆர்எம்-இன் இரு விசாரணை அதிகாரிகள் அந்த வாக்குமூலத்தைப் பெற்றனர்.மலாக்காவில் உள்ள அந்த டான்ஸ்ரீயின் இல்லத்தில் மேற்கொண்ட அதிரடி சோதனையில், எவ்வித பறிமுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று எஸ்பிஆர்எம் வட்டாரம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னர், சம்பந்தப்பட்ட அந்நபரிடம், எஸ்பிஆர்எம் வாக்குமூலம் பெறும் என்று ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.
இதற்கு முன்னர், கைப்பைகள். நகைகள், சொகுசு வாகனங்கள், கடிகாரங்கள், ரொக்கப் பணம், ஆடம்பர வீடு உள்ளிட்ட பல்வேறு உடைமைகளை எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்திருந்தது.
சுமார் மூன்று கோடியே 20 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள அச்சொத்துகள், டான்ஸ்ரீ அந்தஸ்து கொண்ட ஒரு நெடுஞ்சாலை குத்தகையாளருக்கு சொந்தமானது என்றும் நம்பப்படுகிறது.
Seorang individu bergelar Tan Sri disiasat SPRM berkaitan penyelewengan dana sukuk bagi projek lebuh raya di Lembah Klang. SPRM telah ambil keterangan di rumahnya, namun tiada rampasan dilakukan kali ini. Nilai aset dirampas sebelum ini dianggarkan RM32 juta.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *