பல்லின உறவு தேசிய வலிமையின் அடித்தளம்! - மாமன்னர் தம்பதியர் விஷாக் தின வாழ்த்து

- Shan Siva
- 12 May, 2025
கோலாலம்பூர், மே 12: மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான்
இப்ராஹிம் மற்றும் மாட்சிமை தங்கிய பேரரசியார் இருவரும் இன்று நாட்டில் உள்ள
அனைத்து பௌத்தர்களுக்கும் விசாக் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு
இனங்களுக்கிடையேயான வலுவான உறவுகள் தேசிய வலிமையின் அடித்தளம் மட்டுமல்ல, ஒற்றுமையின் தூணும் ஆகும் என்று மாமன்னர் தம்பதியர்
தங்களது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நாட்டின் பல
இன சமூகத்தில், நாம்
ஒருவரையொருவர் மதித்து புரிந்து கொள்ளும்போது நல்லிணக்கம் உருவாகிறது.
ஒன்றாக, நாம் மிகவும் அமைதியான, ஒன்றுபட்ட மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்குகிறோம் என்று வாழ்த்துப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
Sultan Ibrahim dan Permaisuri mengucapkan Selamat Hari Wesak kepada semua penganut Buddha di Malaysia, menekankan perpaduan antara kaum sebagai asas kekuatan negara dan menyeru keharmonian serta masa depan yang aman dan makmur bersama.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *