ஜொகூர் தேர்தலுக்கு அம்னோ தயார்! - Datuk Onn Hafiz Ghazi சூளுரை!

top-news

ஜூன் 14,


அம்னோவின் அடிமட்ட தொண்டர்களால் ஜொகூரில் அம்னோ புத்துயிர் பெற்றிருப்பதாக ஜொகூர் மெந்திரி பெசாரும் ஜொகூர் மாநில அம்னோ தலைவருமாகிய Datuk Onn Hafiz Ghazi தெரிவித்தார். மலாய்க்காரர்களிடையே அம்னோ நம்பிக்கை இழந்துவிட்டதாகப் பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு இது தான் என் பதில் என ஜொகூர் மாநில அம்னோ தொகுதிப் பேராளர் மாநாட்டில் தெரிவித்தார்.

ஜொகூரில் எப்போது தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றிப் பெற அம்னோ தயாராக இருப்பதாகவும் ஜொகூரில் 2,197 அம்னோ கிளைகள் அடிமட்டத் தொண்டர்களால் கட்டமைக்கப்பட்டிருப்பதாகவும் அம்னோ வலுவாக இருப்பதாகவும் Datuk Onn Hafiz Ghazi தெரிவித்தார். அம்னோ 1946 ஆம் ஆண்டு இதே ஜொகூரில் தோற்றுவிக்கப்பட்ட போது இருந்த வலுவான ஆதரவு இப்போதும் இருப்பதாக Datuk Onn Hafiz Ghazi வலியுறுத்தினார். Dato seri Onn Jaafar முயற்சியில் ஜொகூரில் 1946 மே 10 ஆம் நாள் 41 மலாய் அமைப்புகள் ஒருங்கிணைப்பில் அம்னோ தோற்றுவிக்கப்பட்டது. இப்போது ஜொகூரிந் மெந்திரி பெசாராக இருக்கும் Datuk Onn Hafiz Ghazi அவர்களின் தாத்தா Dato seri Onn Jaafar என்பது குறிப்பிடத்தக்கது.


Menteri Besar Johor, Datuk Onn Hafiz Ghazi menegaskan UMNO Johor bersedia menghadapi pilihan raya pada bila-bila masa. Beliau menolak dakwaan UMNO hilang sokongan Melayu dan menyatakan 2,197 cawangan masih kukuh hasil sokongan akar umbi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *