சுங்கை பக்காப் இடைத்தேர்தல்: PH 2,404 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிபெறும்!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஜூலை 4: சுங்கை பக்காப் சட்டமன்றத் தொகுதியில் பெரிகாத்தான் நேஷனலைத் தோற்கடிக்க, ஒற்றுமை  அரசாங்கக் கூட்டணிக்கு மலாய் மக்களின் ஆதரவு 4% அதிகரித்தால் சாத்தியம் என்று   Institut Darul Ehsan (IDE) எனும் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் அடங்கிய கூட்டணி 2023  தேர்தலில் மலாய் வாக்காளர்களிடமிருந்து 32% ஆதரவைப் பெற்றது.  அப்போது பெரிகாத்தான் 1,563 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்று IDE நிர்வாகத் தலைவர் டத்தோ பேராசிரியர் ரெட்சுவான் ஒஸ்மான் கூறினார்.

பெரிகாத்தானை எதிர்த்துப் போட்டியிடும் பக்காத்தான், பெரிகாத்தானைத் தோற்கடிக்க நினைத்தால், சீன மற்றும் இந்திய வாக்காளர்களிடையே அதிக வாக்குகளைப் பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

சுங்கை பக்காப் வாக்காளர்கள் பற்றிய IDE இன் கணக்கெடுப்பின்படி, சீன மற்றும் இந்திய வாக்காளர்களிடையே பக்காத்தானுக்கான ஆதரவு நிலைகள் முறையே 82% மற்றும் 77% ஆக இருந்தது.

சுங்கை பக்காப் வாக்காளர்களில் சீன மற்றும் இந்திய வாக்காளர்கள் 22.4% மற்றும் 17.2% ஆகவும், மலாய் சமூக வாக்காளர்கள் 59.2% ஆகவும் உள்ளனர்.

மலாய்க்காரர்கள் வாக்குகள் 69%, சீனர் வாக்குகள் 60 விழுக்காடு மற்றும் இந்தியர்களின் வாக்குகள் 62% விழுக்காடு பதிவாகியிருந்தால், பக்காத்தான் 2,404 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிபெற முடியும் என்று அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *