சுங்கை பக்காப்: பெண் பத்திரிகையாளரிடம் கைவரிசையைக் காட்டிய நபர்!
- Shan Siva
- 04 Jul, 2024
நிபோங் தெபால், ஜூலை 4: பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஒரு நபர் மோசமான
நடத்தையில் ஈடுபட்டதாக பெண் பத்திரிகையாளர் ஒருவர்
புகார் அளித்ததை அடுத்து, காவல்துறை
முழுமையான விசாரணை நடத்தும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன்
இஸ்மாயில் உறுதியளித்துள்ளார்.
ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அது காவல்துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும், சட்டத்தின் விதிகளைப் பயன்படுத்தி விசாரணையை தொழில் ரீதியாகக் கையாள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சுங்கை பக்காப், பிலே கெராக்கான் உத்தமா பெர்பாடுவானில் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
பெண் பத்திரிகையாளர் ஒருவர் சுங்கை கெச்சிலில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடியின் செய்தியாளர் சந்திப்பின் போது, தனக்குப் பின்னால் அசாதாரண அசைவுகளை உணர்ந்ததாக குற்றம் சாட்டினார்.
அந்தப் பெண் பத்திரிகையாளர்
திரும்பியபோது, பத்திரிகைக் குழுவுடன் தொடர்பில்லாத ஒரு நபர் மோசமான நடத்தையில்
ஈடுபடுவதைக் கண்டுபிடித்ததாகக் கூறினார்.
சுங்கை பக்காப் இடைத்தேர்தலில் PH வேட்பாளர் டாக்டர் ஜூஹாரி அரிஃபினுக்காக ஜாஹிட் பிரச்சாரம்
செய்து கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இதற்கிடையில், செபராங் பிறை செலாத்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர் சோங் பூ கிம் இந்த விவகாரம் குறித்து அறிக்கை பெற்றதை உறுதிப்படுத்தினார். இதனையடுத்து அந்த நபரை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரிகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *