அனல் பறக்கும் சுங்கை பக்காப் தேர்தல் பிரச்சாரம்! பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவாக களத்தில் பிரபலங்கள்!

top-news
FREE WEBSITE AD

சுங்கை பக்காப், ஜூன் 27: பினாங்கின் சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு ஏறக்குறைய இன்னும் ஒரு வாரமே  எஞ்சி இருக்கும் நிலையில்,பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரை ஆதரித்து அரசியல் கட்சிகளும்அரசுசாரா அமைப்புகளும் மேற்கொண்டு வரும் அனல் பறக்கும் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் முடிவுற்ற நாளிலிருந்து, நிபோங் தெபால் நாடாளுமன்றத்தில் உள்ளடக்கிய சுங்கை பக்காப் சட்டமன்றத் தொகுதியில்,பிகேஆர்,அம்னோ,மசீச,அமானா போன்ற பக்காத்தான் உறுப்புக் கட்சிகளும்,ஐபிஎப் போன்ற ஆதரவு கட்சிகளும் தங்களின் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.


மலேசிய  அரிமா சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் ஏற்பாட்டில்   இந்திய மக்களுக்கான நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  இந்தியர்கள் அதிகமாக வாழும் இடங்கள் குறிப்பாக குடியிருப்புப் பகுதிகளில்,பல்வேறு சமூக நல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

அரிமா இயக்கத்தின் சார்பில் அனைத்து நிகழ்வுகளையும் முன்னின்று ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார் கல்வி அமைச்சின் சிறப்பு அதிகாரி என் மண் என் மக்கள் தியாகராஜ் சங்கரநாராயணன்,

சிம்பாங் அம்பாட் வட்டாரத்தில் வசிக்கும் இந்திய வாக்காளர்களின் ஆதரவுபக்காத்தான் ஹராப்பான் பக்கம் திரும்பியிருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது என்று அவர் தெரிவித்தார். மேலும்  பெரியவர்கள் உட்பட இளைஞர் வாக்குகளையும் பெறுவதற்கு ஏற்றவாறு பல்வேறு நிகழ்வுகளையும் தொடர்ந்து நடத்திவருவதாக  அவர் குறிப்பிட்டார்.


பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரை ஆதரித்துஐபிஎப் கட்சியும் தமது தொண்டர்களுடன் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

மேலும் மற்ற மாநிலங்களின் கட்சித் தலைவர்களும் களமிறங்கிபக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து குடியிருப்புப் பகுதிகள், கிராமங்கள்,தோட்டப்புறங்களுக்கும் சென்று ஆதரவு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

சுங்கை பக்காப் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பானுக்கும்,பெரிக்காத்தானுக்கும் ஏற்பட்டுள்ள நேரடிப் போட்டியை எதிர்கொள்ள வேட்பாளர்கள் மட்டுமின்றிகடந்த ஒரு வாரமாக அமைச்சர்களும் முற்றுகையிட்டு பிரச்சாரங்களில் கலந்துகொண்டு வருகின்றனர்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *