இந்தியத் தொழில்முனைவோருக்கு எதற்கு HALAL சான்றிதழ் கட்டாயம்? - DR.RAMASAMY கேள்வி!
- Thina S
- 23 Jun, 2024
அரசாங்கத்தின் மூலம் பெறப்படும் கடனுதவிகளுக்குக் கட்டாய HALAL சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் எனும் நிபந்தனை தேவையற்றது என உரிமை கட்சியின் தலைவர் DR.RAMASAMY தெரிவித்துள்ளார். மேலும் துணை அமைச்சர் ரமணந் இது தொடர்பாக விளக்கமளிக்காமல் இதனை வெளிப்படுத்தியவர்களைக் கோமாளிகள் என வர்ணித்திருப்பது கண்டனத்திற்குரியது என உரிமை கட்சியின் தலைவர் DR.RAMASAMY தெரிவித்தார்.
மேலும் ரமணன் தனது முதலாளிகளிடம் தனது விசுவாசத்தை வெளிப்படுத்த மக்களிடம் உண்மையை மறைப்பதாகவும் அவர் தெரிவித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி, நகராண்மைக் கழக உறுப்பினர் டேவிட் மார்ஷல் ஆகிய இருவரும் இந்தியர்கள் நடத்தும் உணவுக் கடைகளுக்கு எதற்கு HALAL சான்றிதழ் எனும் கேள்வியை முன்வைத்துள்ள நிலையில் அதற்கு பதிலளிக்காமல் ஒருமையில் அவர்களைச் சாடுவது முறையான அரசியல் அல்ல என உரிமை கட்சியின் தலைவர் DR.RAMASAMY தெரிவித்தார்.
இந்தியர்களுக்கு எதற்கு HALAL சான்றிதழ்? அதனைக் கட்டாயம் ஆக்கப்பட்டிருப்பதன் நோக்கம் ஏன்? யாருக்கு விசுவாசத்தைக் காட்ட இந்திய தொழிமுனைவோர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார் ரமணன்? எனும் அடுக்கடுக்கானக் கேள்விகளை DR.RAMASAMY முன்வைத்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *