நாடு முழுவதும் தியாகத் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் இஸ்லாமியர்கள்!

- Muthu Kumar
- 08 Jun, 2025
கோலாம்பூர், ஜூன் 8-
நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் தங்களின் தியாகத் திருநாளை உற்சாகத்துடன் வரவேற்று கொண்டாடினர். பிரதமர் அன்வார் இப்ராஹிம், காலை 8
மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள புத்ரா பள்ளிவாசலில், ஆயிரக்கணக்கான மக்களுடன் சேர்ந்து தியாகத் திருநாள் தொழுகையையும் கடமையையும் நிறை வேற்றினார்.
சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா, சிலாங்கூர் தெங்கு பெர்மாய்சூரி நோராஷிகின் சிலாங்கூரில் உள்ள சுல்தான் சலாஹுடின் அப்துல் அசிஸ் ஷா பள்ளிவாசலில் 10 ஆயிரம் பேருடன் இணைந்து தங்களின் தொழுகையை மேற்கொண்டனர்.மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதில் கலந்து கொண்டார்.
இதனிடையே, பேராக் மாநில சுல்தான், சுல்தான் நஸ்ரின் முய்சுடின் ஷா, மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சரானி முஹமட் உடன் நேற்று காலை, ஈப்போவில் உள்ள சுல்தான் அஸ்லான் ஷா பள்ளிவாசலில் தியாகத் திருநாள் தொழுகையை மேற்கொண்டார்.கெடாவில், மாநில சுல்தான் சுல்தான் கெடா அல்-அமினுல் கரிம் சுல்தான் சலேஹூடின் சுல்தான் பட்லிஷா, மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோர் சுமார் ஈராயிரம் பேருடன் சேர்ந்து தங்களின் கடமையை நிறைவு செய்தனர்.
கோல திரெங்கானுவுக்கு அருகிலுள்ள கம்போங் பங்கோல் செம்பெடாக் குடியிருப்பு மக்கள் நேற்று காலை பங்கோல் செம்பெடாக் சதுக்கத்தில் தங்களின் தொழுகையை மேற்கொண்டனர்.சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்தத் தொழுகைக்குப் பின்னர் அவர்களுக்கு சுவையான உணவும் பரிமாறப்பட்டது.
ஜொகூர் மாநிலத்தில் இடைக்கால ஆட்சியாளர் துவாங்கு மஹ்கோத்தா இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம், நேற்று காலையில் ஜொகூர் பாருவில் உள்ள ஜாமெக் பசார் பெலாங்கி பள்ளிவாசலில் தியாகத் திருநாள் சிறப்புத் தொழுகையில் கலந்து கொண்டார்.
அவருடன், ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி, அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், அரசாங்க மூத்த அதிகாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அத்தொழுகையில் கலந்து கொண்டனர்.
சரவாக் மாநில ஆளுநர் துன் டாக்டர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜாஃபார், அம்மாநில முதலமைச்சர் டான்ஸ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஒபெங், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் ஆகியோர் கூச்சிங்கில் உள்ள ஜாமெக் பள்ளிவாசலில் நடைபெற்ற தியாகத் திருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
Umat Islam seluruh negara menyambut Hari Raya Aidiladha dengan penuh meriah. Pemimpin-pemimpin utama termasuk Perdana Menteri, Sultan negeri-negeri, Menteri Besar, dan rakyat jelata menunaikan solat sunat Aidiladha di masjid-masjid utama di seluruh negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *