பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் கடத்திய பெண் கைது!

- Sangeetha K Loganathan
- 12 Jun, 2025
ஜூன் 12,
பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தாய்லாந்து நாட்டுக்குக் கடத்த முயன்ற மலேசிய பெண்ணை எல்லை பாதுகாப்புச் சிறப்புப் படையான PGA ஆணையம் கைது செய்தது. சந்தேகத்திற்குரிய வாகனம் மலேசிய எல்லை பகுதியில் சுற்றி வருவதை எல்லை பாதுகாப்புச் சிறப்புப் படையான PGA ஆணைய அதிகாரிகள் கண்காணித்த நிலையில் சம்மந்தப்பட்ட வாகனத்திலிருந்து சுமார் RM 62,000 மதிப்பிலானப் பதப்படுத்தப்பட்ட 240 கிலோ கோழிகளையும் 603 கிலோ காய்கறிகளையும் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்து.
காலை 11.30 மணியளவில் RANTAUN PANJANG பகுதியில் வாகனத்துடன் அவர் கைது செய்யப்பட்டதாகவும் வாகனத்திலிருந்த பொருள்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லாதது உறுதியானதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண் 48 வயது மலேசியர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைக்காக அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக எல்லை பாதுகாப்புச் சிறப்புப் படையான PGA ஆணையம் தெரிவித்து.
Seorang wanita Malaysia berusia 48 tahun ditahan PGA di Rantau Panjang kerana cuba menyeludup makanan sejuk beku ke Thailand tanpa dokumen sah. Antara rampasan termasuk 240 kg ayam dan 603 kg sayur bernilai RM62,000. Suspek kini dalam siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *