பொதுமக்கள் தகவல்கள் கசிகிறது! MCA கண்டனம்!

- Sangeetha K Loganathan
- 14 Jun, 2025
ஜூன் 14,
அரசாங்கத்திடம் இருக்கும் பொதுமக்களின் தகவல்கள் கசிவதாக ம.சீ.ச தலைவர் DATUK SERI WEE KA SIONG குற்றம்சாட்டினார். தனிநபர் தகவல்கள் அரசாங்கத்தின் நிறுவனங்களிலிருந்து கசிவதாகவும் இதனால் பல்வேறு மோசடிகள் நிகழ்வதாகவும் WEE KA SIONG குற்றம்சாட்டினார். தரவுகள் கசிவது என்பது இன்றைய தொழில்நுட்ப உலகில் சாதாரணமாக நிகழ்வதாகவும் ஒரு நாட்டின் அரசாங்கத் துறைகளிலிருந்து கசிவது ஏற்றுக் கொள்ள முடியாது என ம.சீ.ச தலைவர் DATUK SERI WEE KA SIONG தெரிவித்தார்.
முறையானத் தொழில்நுட்பப் பாதுகாப்புகள் இல்லாததால் இம்மாதிரியானத் தகவல்கள் கசிவதாகவும் அரசு நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தகவல் பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும் மேம்படுத்த வேண்டும் என ம.சீ.ச தலைவர் DATUK SERI WEE KA SIONG வலியுறுத்தினார். தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டமான PDPA-வை வலுப்படுத்த அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் மோசடிகள் குறித்தான முழுமையான ஆய்வுகளைக் காவல்துறை எடுக்க வேண்டும் என ம.சீ.ச தலைவர் DATUK SERI WEE KA SIONG வலியுறுத்தினார்.
Presiden MCA, Datuk Seri Wee Ka Siong mendakwa maklumat peribadi rakyat bocor dari agensi kerajaan, menyebabkan pelbagai penipuan. Beliau gesa kerajaan perketat sistem keselamatan data, kuatkuasakan PDPA, dan jalankan siasatan menyeluruh terhadap kebocoran data.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *