விஷாக் தினம் வளமான மரபுகளின் அடையாளம்! - அன்வார்

- Shan Siva
- 12 May, 2025
கோலாலம்பூர், மே 12: இரக்கம், நல்லிணக்கம் மற்றும் அமைதி ஆகிய உலகளாவிய மதிப்புகளை
நிலைநிறுத்துவதற்கு விசாக் தினம் ஒரு முக்கியமான நினைவூட்டல் என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின்
பன்முக கலாச்சார சமூகத்தில் பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலை வளர்ப்பதில் இந்தக் கொண்டாட்டங்கள்
முக்கிய பங்கு வகிப்பதாக அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
மனித
கண்ணியத்தின் உணர்வை வளர்க்கவும், பன்முகத்தன்மைக்கு
மத்தியில் ஒருவருக்கொருவர் நேர்மையான மரியாதையை ஊக்குவிக்கவும் இந்தக் கொண்டாட்டங்கள்
அமைவதாக அவர் பதிவிட்டுள்ளார்.
நமது வளமான மரபுகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், ஒன்றுபட்ட மற்றும் இணக்கமான தேசத்திற்கான இத்தகைய மதிப்புமிக்க கொண்டாட்டங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்!
Perdana Menteri Dato' Seri Anwar Ibrahim menyatakan Hari Wesak penting untuk memupuk kasih sayang, keharmonian dan keamanan sejagat. Ia memperkukuh saling hormat dalam masyarakat majmuk Malaysia serta menggalakkan perpaduan dan penghargaan budaya tradisional negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *