மோட்டார் சைக்கிளில் சென்ற இரு பெண்கள் பலி! குவந்தானில் கார் மோதி விபத்து

- Shan Siva
- 12 Jun, 2025
குவாந்தான், ஜூன் 12: நேற்று இரவு, ஜாலான் தெங்கு இஸ்மாயிலில் உள்ள போக்குவரத்து சிக்னல்
சந்திப்பில், மோட்டார்
சைக்கிள் மீது கார் மோதியதில் இரண்டு பதின்ம வயது பெண்கள் உயிரிழந்தனர்.
18 வயதுடைய நூர்
இர்தினா ஷஃபியா முகமது நஸ்ரி மற்றும் பின்னால் இருந்த அனீஸ் இர்தினா சோஃபியா கைருல் அஸ்மான் ஆகியோர்
இரவு 11 மணியளவில் நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெமர்லோ மாவட்ட
காவல்துறைத் தலைவர் ஏசிபி மஸ்லான் ஹசான் தெரிவித்தார்.
விபத்தில்
தொடர்புடைய காரை ஆய்வு செய்தபோது, சியாபு மற்றும்
ஹெராயின் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள்
கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதன் மதிப்பு RM6,000 க்கும் அதிகமாக இருக்கும் என்றும்
மஸ்லான் கூறினார்.
இதனை அடுத்து, கோலாலம்பூர்,
கெப்போங்கைச் சேர்ந்த 38 வயது ஓட்டுநர்,
1952 ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டம்
பிரிவு 39B இன் கீழ் மேலும்
விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக தெமர்லோவில் உள்ள சுல்தான் ஹாஜி அகமது ஷா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்!
Dua remaja perempuan maut dirempuh kereta di Jalan Tengku Ismail. Pemandu berusia 38 tahun ditahan selepas polis menemui dadah disyaki syabu dan heroin bernilai lebih RM6,000 dalam kenderaannya. Siasatan dijalankan mengikut Seksyen 39B ADB 1952.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *