கட்சித் தேர்தலை நடத்துவதில் ZALIHA அலட்சியம்! RAFIZI குற்றச்சாட்டு!

top-news

மே 11,

பி.கே.ஆர் கட்சியின் தொகுதித் தேர்தலை நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்த அமைச்சரும் பி.கே.ஆர் கட்சியின் தேர்தல் குழு தலைவருமான Datuk Seri Dr. Zaliha Mustafa அலட்சியமாகச் செயல்பட்டதால் தொகுதுத் தேர்தலில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதாகப் பொருளாதார அமைச்சரும் பி.கே.ஆர் துணைத் தலைவர் வேட்பாளருமான Datuk Seri Rafizi Ramli குற்றம்சாட்டினார். கடந்த பொதுத்தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றியதும் பி.கே.ஆர் கட்சியில் கண்மூடித்தனமாக உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ந்ததை அப்போதே தாம் எதிர்த்ததாக Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார்.

பி.கே.ஆர் கட்சியின் தொகுதித் தேர்தலில் எழுந்த பல்வேறு பிரச்சனைகளுக்கு முக்கிய கரணமாக இருந்தது புதிதாகக் கட்சியில் சேர்ந்த உறுப்பினர்கள் என்றும் அவர்களின் பின்னனியை முழுமையாக ஆராயாமல் கட்சியில் உறுப்பினராக்கியதால் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களுக்குக் கட்சியின் தேர்தல் குழு தலைவர் எனும் அடிப்படையில் Datuk Seri Dr. Zaliha Mustafa பொறுப்பேற்க வேண்டும் என்றும் Datuk Seri Rafizi Ramli சாடினார். 

Timbalan Presiden PKR, Rafizi Ramli mendakwa Dr. Zaliha Mustafa gagal mengendalikan pemilihan parti dengan baik. Beliau menyuarakan kebimbangan terhadap keahlian 'sementara' dan menegaskan JPP harus teliti menangani aduan serta menyemak kesahihan calon.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *