மக்களின் ஆனந்த கண்ணீருக்கு இடையே மீண்டும் திறக்கப்பட்ட பெய்லி ஆற்றுப் பாலம்!
- Muthu Kumar
- 23 Sep, 2024
தஞ்சோங் மாலிம், செப்.23-
ஜாலான் ஸ்லிம் ரிவர்- பெஹ்ராங் உலுவிற்கான ஆற்றுப் பால நிர்மாணிப்பு முடிந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்பட்டதில் ஸ்லிம் ரிவரில் இருக்கும் கம்போங் ஸ்லிம் பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
இந்த பால மறுநிர்மாணிப்பு நடவடிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி கடல் பெருக்கு ஏற்பட்டுச் சுற்றுப் பகுதி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.இதில் கடந்த 28 நாட்களாக நிரந்தர வாடிக்கையாளர்களைச் சந்திக்க முடியாமல் திடீரென மீண்டும் சந்தித்ததில் தாம் மகிழ்ச்சியடைந்ததாக மளிகைக் கடை வணிகரான 53 வயதான கே.ராமதாஸ் தெரிவித்தார்.
கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் தாங்கள் மீண்டும் அத்தியாவசியத் தேவைக்கான பொருட்களை வாங்கிச் செல்வதற்குச் சுலபமான ஓர் அணுகல் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆனந்த கண்ணீர் சிந்தினர்.அந்த பாலத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறப்பதற்கு முன்பு அனைவரும் கடந்த சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஒன்றுகூடி விட்டனர்.பாலம் திறக்கப்பட்ட பிறகு அக்கடையில் கம்போங் ஸ்லிம் சுற்றுப் பகுதி மக்கள் நிரம்பி விட்டனர்.
பாலத்தில் மாலை 4.30 மணிக்கு வாடிக்கையாளர்கள் ஒன்றுகூடி நிரம்பி விட்டனர். பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மாலை 5.00 மணிக்குப் பாலம் திறக்கப்படுவதற்கு முன்பு கடை முழுவதும் வாடிக்கையாளர்கள் நிரம்பி விட்டனர். நான் கடந்த 34 ஆண்டுகளாக இங்கு வணிகத்தை மேற்கொண்டு வருகிறேன். இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பு நிகழ்ந்ததே இல்லை.தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு வணிகம் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்த புதிய பாலம் மிகவும் தரமானதாக இருந்து நீண்ட காலத்திற்கு நீடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று செய்தியாளர்களிடம் பேசிய போது ராமதாஸ் குறிப்பிட்டார். இதனிடையே, பாலம் உடைந்த பிறகு வாழ்க்கையை நிர்வகிக்கப் பள்ளியின் சிற்றுண்டிச் சாலையில் மட்டுமே வேலை செய்து கொண்டிருந்த 36 வயதான நூர்ஹானிஷா அப்துல் ரஹிம் தற்போது கடையின் உதவியாளராக தன் உண்மையான வேலையை மீண்டும் தொடர்வதில் மகிழ்வதாக தெரிவித்தார்.
இந்த நகரம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிள்ளைகளும் சுலபமாகப் பள்ளிக்குச் சென்று வருவார்கள் என்று செய்தியாளர்களிடம் பேசிய போது நூர்ஹானிஷா அப்துல் ரஹிம் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *