மோரிப் கடற்கரை வளாகத்தில் தேசிய மலரான செம்பருத்திச் செடி நடும் நிகழ்வு!

top-news
FREE WEBSITE AD

பந்திங், செப்.23

பந்திங் வட்டார அரசு சாரா இயக்கங்கள், பப்ளிக் வங்கிப் பணியாளர்கள் மற்றும் பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் நேற்று காலையில், மோரிப் கடற்கரை வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் நாட்டின் தேசிய மலரான செம்பருத்திச் செடி நடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பந்திங் நகரில் செயல்படும் பப்ளிக் வங்கி மற்றும் சுங்கை பீலேக் பப்ளிக் வங்கியில் சேவை யாற்றி வரும் அதன் அதிகாரிகள், முகப்பிடப் பணியாளர்கள் களத்தில் இறங்கி செம்பருத்திச் செடிகள், வனப்பு தரும் சிறிய - வகையிலான பூ மரங்களை நடும் பணியில் ஈடுபட்டதாக இதன் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட வங்கிப் பணியாளர் வசந்தி தெரிவித்தார்.இந்தத் திட்டம் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் அனுமதியுடன் 100 செம்பருத்திச் செடிகள் நடும் நடவடிக்கை தங்கு தடையின்றி நேர்த்தியாக நடைபெற்ற தாக அவர் கூறினார்.

கோல லங்காட் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ள மோரிப் கடற்கரை உல்லாசத் தளம்,உள்ளூர் வெளியூர் சுற்றுப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் பூச்செடிகள் நடும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக வசந்தி தமிழ் மலரிடம் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *