பாஸ் கட்சிக்கும் GISB’க்கும் தொடர்பில்லை! நம்புங்கள்! – TAKIYUDDIN வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

சிறார் வன்கொடுமைகள் தொடர்பான Global Ikhwan Services and Business (GISB) Holdings நிறுவனத்திற்குச் சம்மந்தப்பட்ட 200 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தேசியக் காவல் படை தலைவர் TAN SRI RAZARUDIN தெரிவித்த நிலையில் சம்மந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் TAKIYUDDIN HASSAN தெரிவித்தார்.

இக்கொடுமைகளைச் செய்ததாக நம்பப்படும் GISB நிறுவனத்திற்கும் பாஸ் கட்சிக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதைப் பாஸ் கட்சியின் தலைவர்கள் தெரிவித்து வருவதை நம்புங்கள் என பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் TAKIYUDDIN HASSAN வலியுறுத்தினார். இது போன்ற சிக்கல்களில் பாஸ் கட்சியைச் சிக்க வைக்கும் ஒரு சிலரின் செயல்கள் கண்டிக்கத்தக்கது என அவர் கண்டனம் தெரிவித்தார்.

மலேசியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்குப் பாஸ் கட்சியே முழுமையாகத் தன்னை ஈடுபடுத்தியிருப்பதை மறக்க வேண்டாம் என TAKIYUDDIN HASSAN கேட்டுக்கொண்டார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *