மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத் தேர்தல் முடிவுகள்!

top-news
FREE WEBSITE AD

மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தேர்தல் நிறைவுற்றது. தலைவர் பொறுப்புக்குப் தினத்தந்தி இயங்கலை ஊடகத்தின் ஆசிரியர் செ.வே.முத்தமிழ் மன்னனும் நம்பிக்கை இயங்கலை ஊடகத்தின் மேலாளருமான ச.தயாளன் போட்டியிட்டனர்.

163 உறுப்பினர்களைக் கொண்டு இயங்கும் மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் தேர்தலில் 113 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

தலைவர் பொறுப்புக்குப் போட்டியிட்ட முத்தமிழ் மன்னன், தயாளன் சண்முகத்தை விட 5 வாக்குகள் அதிகம் பெற்று இவ்வாண்டுக்கானத் தலைவராக்ப் பொறுப்பேற்றார். முத்தமிழ் மன்னன் 58 வாக்குகளும் தயாளன் சண்முகம் 53 வாக்குகளும் பெற்றனர். 

துணைத் தலைவர் பொறுப்புக்கு நம்பிக்கை இயங்கலை ஊடக்கத்தின் தலைமை நிருபர் நா.பார்த்திபன், தமிழ் லென்ஸ் இயங்கலை ஊடகத்தின் நிருபர் தி.காளிதாசன் போட்டியிட்டனர். தமிழ் லென்ஸ் இயங்கலை ஊடகத்தின் நிருபர் தி.காளிதாசன் 62 வாக்குகளுகள் நம்பிக்கை இயங்கலை ஊடக்கத்தின் தலைமை நிருபர் நா.பார்த்திபன் 50 வாக்குகளும் பெற்ற நிலையில் தமிழ் லென்ஸ் இயங்கலை ஊடகத்தின் நிருபர் தி.காளிதாசன் துணைத் தலைவராக வெற்றிப் பெற்றார்.

உதவித் தலைவர்களாக தமிழ் லென்ஸ் இயங்கலை ஊடகத்தின் நிருபர் தி.காளிதாசன் 89 வாக்குகளும், மலேசிய நண்பன் நிருபர் ஜீவா 68 வாக்குகளும் தமிழ் நேசனின் மூத்த புகைப்பட கலைஞர் மு.இரவி 59 வாக்குகளும் பெற்றனர்

செயலாளராகத் தமிழ் லென்ஸ் இயங்கலை ஊடகத்தின் ஆசிரியர் வி.வெற்றி வாணன், துணைச் செயலாளரா மலேசிய நண்பனின் குணாளன், பொருளாளராகப் பெர்னாமா செய்திப் பிரிவின் கிரீஸ் ஆகியோர் ஒருமனதாகப் போட்டியின்றி தேர்வாகினர்.

ஆட்சிக் குழு உறுப்பினர்களாக ஆர்டிஎம் மூர்த்தி, தினத்தந்தி இயங்கலை ஊடகத்தின் மா. பவளச்செல்வன், காளிதாஸ், சுப்ரமணியம், மலேசிய நண்பன் அமுதா, விஜயா, மக்கள் ஓசை சுந்தர், யோகேஸ்வரன், தமிழ் நேசன் கிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்தல் அதிகாரி கெப்போங் கிருஷ்ணமூர்த்தி, செராஸ் ஷான் முத்துசாமி ஆகியோர் பொறுப்பேற்று இத்தேர்தலை நடத்தினர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *