11,068 மலேசிய நிபுணர்கள் நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளனர்! - மனிதவள அமைச்சர் தகவல்

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூலை: வெளிநாட்டில் வசிக்கும் 11,068 மலேசிய நிபுணர்கள் மலேசியாவுக்குத் திரும்ப விண்ணப்பித்துள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

2011 முதல் இந்த ஆண்டு மே 31 வரையிலான TalentCorp இன் ரிட்டர்னிங் எக்ஸ்பர்ட் திட்டத்தின் பதிவுகளின்படி 6,969 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

உயர் திறன் கொண்ட உள்ளூர் திறமையாளர்களை மலேசியாவிற்குத் திரும்ப ஈர்ப்பதற்காக பல்வேறு வரி விலக்குகள் உட்பட பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

மலேசிய புலம்பெயர்ந்தோர் எங்கிருந்தாலும் மலேசியாவுக்குத் திரும்பப் பங்களிப்பதற்கான வழிகளை அமைச்சு கண்டுபிடித்து வருவதாகக் கூறினார்.

இதற்காக MyHeart திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், TalentCorp ஆல் இது  வழிநடத்தப்படும் என்றும் சிம் கூறினார்.

MyHeart மலேசியாவில் பல்வேறு வேலை வாய்ப்புகள், அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி, உள்ளூர் நிறுவனங்களுடன் ஒத்துழைக்கும் வாய்ப்புகள், வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளுக்கான அனுமதிகள் மற்றும் வேலைவாய்ப்பு சந்தையில் புதுப்பித்தல்கள் மூலம் மலேசியாவில் மீண்டும் ஒருங்கிணைவதற்கான வழிகளை எளிதாக்கும் என்று அவர் இன்றைய நாடாளுமன்ற கேள்விபதில் நேரத்தின் போது தெரிவித்தார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *