இன்றும் நாளையும் கிள்ளான் KTM கம்யூட்டர் இரயில் பயணிகளுக்கு 50% கட்டணக் கழிவு!

- Muthu Kumar
- 03 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 3:
இன்றும் நாளையும் கிள்ளான் பள்ளத்தாக்கு கே.டி.எம். கம்யூட்டர் இரயில் பயணிகளுக்கு 50 விழுக்காடு கட்டணக் கழிவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சலுகை அனைத்து வகை டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும் என KTMB நிறுவனம் அறிவித்துள்ளது.
மே 30 தொடங்கி கெப்போங் மற்றும் சாலாக் செலாத்தான் KTM இரயில் நிலையங்களில் சமிக்ஞை தரமுயர்த்தும் பணிகள் நடைபெறுவதால் இரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடாக இந்தக் கட்டண கழிவுச் சலுகை வழங்கப்படுவதாக KTMB நிறுவனம் விளக்கியது.
எனவே பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவதோடு, KTMB Mobile செயலி அல்லது MyRailtime அகப்பக்கம் வாயிலாக பொது மக்கள் தங்களின் பயண நேர அட்டவணை மாற்றங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.
KTMB mengumumkan diskaun tambang 50 sen untuk penumpang kereta api Komuter di Lembah Klang hari ini dan esok. Diskaun ini sah untuk semua jenis tiket sebagai pampasan atas kelewatan akibat kerja naik taraf isyarat di stesen Kepong dan Salak Selatan sejak 30 Mei. Penumpang dinasihatkan merancang perjalanan awal dan menyemak jadual melalui aplikasi KTMB Mobile atau MyRailtime.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *