ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்! சிலாங்கூரில் அச்சுறுத்தும் புதிய தொற்று நோய்!

- Sangeetha K Loganathan
- 02 Jun, 2025
ஜூன் 2,
ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள பன்றிகளுக்கு ஏற்படும் தொற்று நோய் போலவே மலேசியாவிலும் பரவும் அபாயம் இருப்பதாகச் சிலாங்கூர் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையத்தின் (Perhilitan) இயக்குநர் Wan Mohd Adib Wan Mohd Yusoh இன்று எச்சரிக்கைவிடுத்தார். கடந்த ஏப்ரல் 28 முதல் மே 15 வரையில் அம்பாங்கில் மர்மமான முறையில் உயிரிழந்த 6 காட்டுப் பன்றிகளைச் சோதனையிட்டதில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் எனும் African Swine Fever (ASF) தொற்று நோய் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்திருப்பதாக சிலாங்கூர் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையத்தின் (Perhilitan) இயக்குநர் Wan Mohd Adib Wan Mohd Yusoh தெரிவித்தார்.
இந்த வகை தொற்று நோய் காட்டுப் பன்றிகளிடையே விரைவாகப் பரவும் என்றும் ஆனால் இதுவரையில் இந்த தொற்று மனிதர்களுக்குப் பரவியதில்லை என சிலாங்கூர் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையத்தின் (Perhilitan) இயக்குநர் Wan Mohd Adib Wan Mohd Yusoh உறுதிப்படுத்தினார். கால்நடைகளை வளர்ப்பவர்கள் முக்கியமாக பன்றிகளை வளர்ப்பவர்கள் மொத்தனமாக இருக்க வேண்டாம் என்றும் நோயினால் பாதிக்கப்பட்ட பன்றிகளின் இறைச்சிகளைச் சந்தைப்படுத்த வேண்டாம் என்றும் சிலாங்கூர் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையத்தின் (Perhilitan) இயக்குநர் Wan Mohd Adib Wan Mohd Yusoh கேட்டுக் கொண்டார்.
Selangor mengesahkan penemuan virus African Swine Fever (ASF) pada enam babi hutan yang mati secara misteri di Ampang antara 28 April hingga 15 Mei. Walaupun tidak menular kepada manusia, penternak dinasihat elak jualan daging babi dijangkiti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *