மகாதீர் மகன்கள் விவகாரம்: MACC-யில் அன்வார் தலையீடா? பிரதமர் அலுவலகம் மறுப்பு!
- Shan Siva
- 26 Sep, 2024
புத்ராஜெயா, செப் 26: முன்னாள் பிரதமர் மகாதீர், அவரது மகன்கள் மற்றும் அவரது நீண்டகால நம்பிக்கைக்குரிய டைம் ஜைனுதீன் ஆகியோரை விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டதாகக் கூறப்படும் கூற்றுகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
எம்ஏசிசி நடத்திய விசாரணைகளில் பிரதமர் ஒருபோதும் உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை அல்லது தலையிடவில்லை என்பதை பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
MACC ஒரு தனித்த அமைப்பாக செயல்படுகிறது. பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் செயல்படுகிறது என்று அது குறிப்பிட்டுள்ளது.
மகாதீர், அவரது மகன்கள் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் டைம் ஆகியோரை விசாரணை செய்வதற்கான அறிவுறுத்தல்கள் அன்வாரிடமிருந்தே வந்ததாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது.
ப்ளூம்பெர்க் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளை மறுத்த அசாமின் அலுவலகம், எம்ஏசிசி சுதந்திரமாக இயங்குகிறது என்றும், பிரதமரிடம் கூட அனுமதி பெறாமல், யாரிடமும் அனுமதி பெறாமல் ஊழல் புகார்களை விசாரிக்க அதிகாரம் உள்ளது என்றும் கூறியது.
குறிப்பிட்ட விசாரணைகளில் செல்வாக்கு அல்லது இடையூறு விளைவிப்பதற்கான பிரதம மந்திரியின் அறிவுறுத்தல்கள் தொடர்பான கூற்றுக்களை MACC உறுதியாக மறுக்கிறது என்று மேற்கோள் காட்டப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *